×

ஆலகாலம் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: ஜெய் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜெயகி இயக்கியுள்ள படம், ‘ஆலகாலம்’. சமூகத்திலுள்ள மிகப்பெரிய பிரச்னைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி இப்படம் யதார்த்தமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் திரைக்கு வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தாயின் கனவை நனவாக்க முயற்சிக்கும் இளைஞனின் வாழ்க்கை சமூகத்தால் சீரழிகிறது.

அதிலிருந்து அவனை மீட்பதற்காக அவனுடைய தாயும், காதலியும் போராடுகின்றனர். இறுதியில் அந்த இளைஞன் மீண்டானா? வாழ்க்கையில் ஜெயித்தானா? தாயின் கனவு நிறைவேறியதா என்பது படத்தின் கதை. தாய் வேடத்தில் ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஜெயகி, சாந்தினி ஜோடியாக நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் நடித்துள்ளனர். கே.சத்யராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.

 

The post ஆலகாலம் பர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Jayaki ,Jay Productions ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...